-
01. குறுங்கையின் எழில்மிகு தோற்றம்
Thirukkurungudi Sthalapuranam – Part 1 இந்தியாவின் தென் கோடியில் கன்னியாகுமரிக்கு சுமார் இரண்டு மணி நேரம் முன்னதாக, நெல்லை மாவட்டத்தில், திருநெல்வேலி – கன்னியாகுமரி சாலையில் அமைந்துள்ள வள்ளியூரிலிருந்து களக்காடு செல்லும் சாலையில், வழியெங்கும் மரங்களாக, வளைந்து வளைந்து செல்லும் ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி இனிய பயணம், ஒரு புறம் சிறிய சிறிய ஊர்கள், மறுபுறம் “மகேந்திர கிரி” மலைத்தொடரின் ஒரு பகுதியின் அருகில் உள்ள…
-
02. திருக்குறுங்குடி கோவிலின் முகத்தோற்றம்
Thirukkurungudi Stalapuranam – Part 2 எங்ஙனேயோ அன்னைமீர்காள்!* என்னை முனிவது நீர்?* நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்* சங்கினோடும் நேமியோடும்* தாமரைக் கண்களோடும்* செங்கனி வாய் ஒன்றினோடும்* செல்கின்றது என்நெஞ்சமே*. -நம்மாழ்வார் என்ற ஆழ்வார் பாசுரத்திற்க்கு இணங்க நம் கால்கள் கோவிலை நோக்கி நகர நம் மனம் பெருமாளை நினைத்து பக்தி பரவசத்துடன் திகைக்க நாம் கோவிலுக்கு எதிரே உள்ள சன்னதி தெருவில் நடக்க ஆயத்தமாகிறோம்.…
-
03. ஐந்து பிரஹாரங்களுக்கு நடுவில் ஐந்து நிலைகள்
Thirukkurungudi Sthalapuranam – Part 3 திருக்குறுங்குடியில் பெருமாள் ஐந்து நிலைகளில் காட்சி தருகிறார். இவைகள் ஐந்து நிலையாகும். பரம் இதில் முதலாவதான பரம் என்பது பரமபதத்தை குறிக்கும்.இந்த பரமபதம் என்பது பகவானின் மூலஸ்தானம். இங்கு ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி சமேதராக பாம்பணையில் அமர்ந்திருப்பார். இங்கு தேவர்கள் முனிவர்கள் என யாவருக்கும் இடம் கிடையாது. பூவுலகில் ஆசார்யன் அனுக்ரஹம் பெற்று வாழ்ந்து முடித்த, ஜீவாத்மாக்கள் மட்டுமே அங்கு பக்தர்களாக பகவான்…
-
04. திருக்குறுங்குடி கோவில் பெருமாளின் எழில்மிகு ஏற்றம்
Thirukkurungudi Stalapuranam – Part 4 வாமன அவதாரத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்பதால் இந்த ஊருக்கு வாமன க்ஷேத்ரம், குறுங்கா க்ஷேத்ரம் என்று பல புனைப்பெயர்களும் உள்ளன. மேலும் குறுகியவனுடைய குடியானதால் “குறுங்குடி” என்று அளிக்கப்படுகிறது. இந்த திவ்ய ஷேத்திரம் 108 திவ்ய தேசத்தில் 89 வது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு திவ்ய ஷேத்திரத்திலும் பெருமாளாலே ஏற்றம், பிராட்டியாலே ஏற்றம் அல்லது ஆழ்வார் ஆச்சார்யர்களாலே ஏற்றம். ஆனால் இந்த திவ்ய…
-
05. மட்டையடி மண்டபமும் அரையர் ஸேவையும்
Thirukkurungudi Stalapuranam – Part 5 மிகப்பெரிய வாயில்களை உடைய இந்த மண்டபத்தில் உற்சவ காலங்களில் பெருமாள் இங்கு எழுந்தருளி திருமஞ்சனம், திவ்ய பிரபந்த ஸேவாகாலம் (ஆழ்வார்கள் பாசுரம்) போன்ற நித்திய க்ரமங்களும் நடைபெறும். மேலும் உற்சவத்தில் 8-ம் நாள் பெருமாள் பார்வேட்டைக்கு குதிரை வாகனத்தில் செல்லும் போது மழைக்காக ஒதுங்கி தாமதமாக கோவிலுக்கு எழுந்தருள்வதை கண்டு தாயார் கோபித்துக்கொள்ள, தாயாரின் கோபத்தை தணிக்க அன்று பெருமாள் பல்லக்கு தாங்கும்…
-
06. ஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் மடம்
Thirukkurungudi Sthalapuranam – Part 6 திருக்குறுங்குடிக்கு ஸ்ரீராமானுஜர் எழுந்தருளி வீற்றிருக்கும் நம்பிக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்று தாஸ்ய நாமம் ஸமர்ப்பித்தவுடன் தம்முடைய நித்யநைமித்திகோத்ஸவாதிகளையும், ஸ்ரீ பண்டார ஸ்ரீ கார்ய நிர்வாகத்தையும் நடத்தி வருவதற்கு உம் திருக்கையாலே மடம் ஸ்தாபிக்க வேணும் என்று நம்பி ராமாநுஜரிடம் திருவுள்ளம் கொண்டபடியால், கலியுகம் 4195க்கு சரியான கொல்லம் ஆண்டு 268 ஸ்ரீ முகவருஷம் தம்முடைய ஆச்சார்யரான பெரிய நம்பியினுடைய திருவம்ஸத்தில் அவதரித்து தமக்கு…