Thirukkurungudi Stalapuranam – Part 15
கைசிக மண்டபம்
நாம் அனைத்து ஸந்நிதிகளையும் ஸேவித்து முடித்துவிட்டு கொடி மரம் வழியாக ப்ரதக்ஷணமாக வரும் பொழுது கொடி மரத்திற்கு நேரே திருமடப்பள்ளி பக்கத்தில் கைசிக மண்டபம் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி அன்று பெருமாள் தாயாருடன் எழுந்தருளி கைசிக நாடகம் தத்ருபமாக நடைபெறும்.
கரண்டமாடு வீதி பிரஹாரம்
கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும்பழம் புரண்டு வீழ வாளைபாய் குறுங்குடி நெடுந்தகாய் திரண்ட தோள் இரணியன் சினங்கொள் ஆகம் ஒன்றையும்
திருமழிசையாழ்வார்
இரண்டுகூறு செய்துகந்த சிங்கம் என்பது உன்னையே
இந்த பாசுரத்திற்கேற்ப இந்த பிரகாரத்தில் இருக்கும் புஷ்கரிணிக்குக் கரண்டமாடு பொய்கை என்று திருநாமம் உண்டு. கரும்பனைப் பெரும்பழம் என்று பணித்தது பழுதாகாமைக்காக அப்புஷ்கரிணியின் கரையில் ஒரு திருப்பனைமரம் நம்பியின் கடாக்ஷமேதாரகமாக நாளைக்கும் வளர்ந்து வருதலும் அறியத்தக்கன. சினம் என்று விம்முதலுக்கும் வாசகமாகையாலே, சினங்கொள் ஆகம்- விம்ம வளர்ந்த சரீரம் பொருள்.
இந்த பிரகாரத்தில் எழுந்தருளிருக்கிற கார்முகில்வண்ணனான கண்ணபிரான் ஸந்நிதி உள்ளது. ஒவ்வொரு மாதமும் ரோஹினி நக்ஷத்திரத்தில் இந்த கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் மற்றும் இதே கரண்டமாடு பிரகாரத்தில புறப்பாடு நடைபெறும்.
இராப்பத்து உற்சவம்
கிருஷ்ணரை தரிசித்துவிட்டு அடுத்து நகர்ந்தால் ஒரு மண்டபம் தென்படும். இந்த மண்டபத்தில் பேரருளான பெருமாள் தாயாருடன் வைகுண்ட ஏகாதசி அன்று முதல் திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் மோக்ஷம் வேண்டி மறியல் செய்ய 10 நாட்கள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி
சேவாகாலம், கோஷ்டி முதலிய வைபவங்கள் நடைபெறும். 10-ம் நாள் முடிவில் பரமபத வாசல் வழியாகவே பெருமாள் தாயாருடன் வெளியே எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்கு மோக்ஷம் அளிக்கும் வைபவம் மிக விமர்சையாக நடைபெறும். இந்த மண்டபத்தை கடந்து சென்றால் பரமபத வாசலின் உள் பகுதியை தரிசிக்கலாம்.