Thirukkurungudi Stalapuranam – Part 10
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் ஸந்நிதி
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜவலந்தம் சர்வதோமுகம்,
நரசிம்ஹர் ஸ்லோகம்
நரஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யூர் ம்ருத்யூம் நமா மஹே
திருமாலின் 10 அவதாரங்களில் மிகவும் மகத்துவமான அவதாரமாக நரசிம்ம அவதாரம் கருதப்படுகிறது. நரசிம்ஹர் பல ஊர்களில் பற்பல திருக்கோலங்களில் காட்சி அளிக்கிறார். இந்த ஊரில் தெப்பக்குளத்தின் அருகில் யோக நரசிம்ஹர் ஸந்நிதியும் இங்கு பெருமாளுக்கு அருகில் லக்ஷ்மி நரசிம்ஹர் ஸந்நிதி அமைந்துள்ளது.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் சிறப்பம்சம்
இங்கு நரசிம்ஹர் தனது இடக்கையால் லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்து கொண்டுள்ளார். லக்ஷ்மிதேவி தன்னுடைய வலதுகையால் நரசிம்மரை ஆலிங்கனம் செய்துள்ளார். மேலும் நரசிம்ஹரின் வலது கை அபயஹஸ்த்ததுடன் காட்சி அளிக்கிறார். லக்ஷ்மி தேவி தன்னுடைய இடது கையில் பத்மத்துடன்( தாமரை மலர்) காட்சி அளிக்கிறார்.
இந்த ஊரின் க்ஷேமத்தை காக்கும் பொருட்டு லக்ஷ்மி நரசிம்ஹர் ஸந்நிதி திருக்காப்பு சாத்தப்படுவது இல்லை என்பது ஐதீகம்.
லக்ஷ்மி நரசிம்ஹர் சந்நிதியில் நீராஞ்சனம் மற்றும் நெய் விளக்கு ஏற்றி வழிப்பட்டால் தீராத பல வினைகளும் தீரும்.
ஆடி ஆடி அகம் கரைந்து
திருவாய்மொழி
இசை பாடி பாடி கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று
வாடி வாடி இவ்வாணுதலே.
ஸ்ரீலக்ஷ்மி வராஹர் ஸந்நிதி
வராஹ அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி தனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி ஆனது. பூமாதேவி இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளை வழிபட்டதால் இத்தலத்திற்கு குறுங்கா க்ஷேத்ரம் என்ற பெயர் உண்டு.
ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான்.அப்போது விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமாதேவி இந்த பூமியில் உள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராஹமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்று கைசிக ஏகாதசி மஹாத்மிய கதையை கூறுகிறார்.
குறுங்குடிவல்லித் தாயார் ஸந்நிதி
இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் தனிக் கோவில் தாயாரின் திருநாமம் குறுங்குடிவல்லித் நாச்சியார். அதனால் தான் இத்திருக்கோவிலுக்கு திருக்குறுங்குடி என்று பெயர் வந்தது.
சிவபெருமான் பிரம்மதேவனின் தலையைப் பறித்து பிரம்மகத்தி தோஷம் நீங்கியபோது, இந்தத் தலத்திற்கு வந்து, நின்ற நம்பியின் ஆலோசனைப்படி, அந்த தோஷத்தைப் போக்க, குருங்குடி வள்ளி தாயாரிடம் அமுதம் (உணவு) வேண்டிக் கொண்டார். பாவ விமோச்சனம் என தோஷம். அதன்பிறகு, வாமனரிடம் சுதர்சன ஜபம் கற்று, தோஷத்தில் இருந்து முழுமையாக வெளியேறினார்.
தாயார் சந்நிதியில் தை மாதம் புஷ்பாஞ்சலி மிக விமரிசையாக நடைபெறும்.
தசாவதார ஸந்நிதி
मत्स्य कूर्मो वराहश्व वरसिम्होऽथ् वामन:
परसुरामो रामश्व बलरामश्व कृष्णश्व कल्किर्नमोऽस्तु ते
என்ற ஸ்லோகத்தின் இந்த திருக்க்க்கோவிலில் திருமால் 10 அவதாரங்களில் காட்சி தருகிறார்.
திருவேங்கடமுடையான் ஸந்நிதி
கமலக் கண்ணன்கட்கே கண்ணும் மனமும் கையுமாய் அமலர் சிந்தை யென்றும் ஆளும் திருமலைமேல் கமலக் கண்ணன் பாதம் கண்ணால் காணும் நாள்வரை அமலர் சிந்தை யென்றும் ஆளும் திருமலைமேல்
திருமலையில் காட்சி அளிக்கும் திருவேங்கடமுடையான் எல்லா திவ்யதேசங்களிலும் ஒவ்வொரு திருப்பெயரில் காட்சி தருகிறார். அதுபோல இந்த திவ்யதேசத்திலும் திருவேங்கடமுடையான் என்ற திருப்பெயரில் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத காட்சி அளிக்கிறார்.
ஆண்டாள் ஸந்நிதி
திருஆடிப் பூரத்தில் பெரியாழ்வாருக்கு திருமகளாக ஜகத்துதித்து, திருப்பாவை முப்பதும் இயற்றி, திருமால் கண்ணனை தான் சூடிக் களைந்த மாலைகளாலே கட்டி வசப்படுத்தி,பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகி,தொன்று தொட்டு அநுசரிக்கப்பட்டு வரும் பழமையான பாவை நோன்பு திருப்பாவை என்பதையே தொல்பாவை என்று உலகிற்கு எடுத்துரைத்து வேங்கடவனுடன் கூடி இருந்து குளிர்ந்தேரோல் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்….!!!