8. நம்பாடுவானுக்கும் ப்ரம்ம ராக்ஷஸனுக்கும் மோக்ஷம் கடாக்ஷித்த ஸ்ரீ அழகிய நம்பி

Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 8

ஏ ப்ரம்ம ராக்ஷஸனே, இன்று அதிகாலை இந்த திருக்குறுங்குடி பகவான் முன்பு🌹🌹கைசிகம்🌹🌹 என்று ஒரு பாடல் தொகுப்பு பாடி வந்தேன். அதனுடைய முழு பலனையும் உனக்கு அர்ப்பணிக்கிறேன். நீ இந்த ஜென்மாவிலிருந்து விடுபட்டு, ‌பகவான் ஸ்ரீமன் நாராயணனின் சாம்ராஜ்யமான பரமபதத்திற்கு செல்வாயாக! என்று நம்பாடுவான் பாட்டின் பலனை அர்ப்பணித்த, அடுத்த நொடியே ப்ரம்ம ராக்ஷஸனின் சாபங்கள் மறைந்து போயின.

(பகவானின் உலகமான பரமபதம் தான் மோக்ஷம் அடைந்த ஜீவன்கள் செல்லுமிடம். இங்கு ஜீவாத்மாக்கள் செல்ல ஆசார்யன் திருவடி அடைந்து ஸமாஷனம் செய்து கொண்டிருக்க வேண்டும் அல்லது பகவான் நேரடியாக அருள வேண்டும். அப்படிப்பட்ட பரமபதத்திற்கு ஒரு ஆத்மாவை நம்பாடுவான் அனுப்பி வைக்கிறான் என்றால் அவன் எப்பேர்ப்பட்ட பக்தனாக இருந்திருக்க வேண்டும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.)

பூதேவி! இப்படி நம்பாடுவானால் அபயம் கொடுக்கப்பட்ட ப்ரம்ம ராக்ஷஸன், நல்ல குலத்தில் பிறந்து, நமக்கு பல்லாண்டு பாடிக் கொண்டு பல வருடங்கள் பூவுலகில் நல்ல படியாக வாழ்ந்து, பிறகு நமது பெரிய வீடு (பரமபதம் எனும் மோக்ஷ சாம்ராஜ்யம்) வந்தடைந்தான்.

இதன் பிறகு நம்பாடுவானும் பல வருடங்கள் நமக்கு பாடல்கள் பாடி பிறகு அவனும் நம் பெரிய வீடு பெற்றான் என்று வராஹ பகவான் சொல்லி முடித்தார்.

இந்த கைசிக புராணத்தை கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி தினத்தில் படிக்கும் பக்தர்கள், அல்லது யாராவது படிக்க அதை கேட்கும் பக்தர்கள்,

இவர்கள் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே என்று பாடி, எனக்கு பல்லாண்டு பாடிக் கொண்டு, இவ்வுலகில் நலமுடன் வாழ்ந்து என்னை வந்து அடைவார்கள் என்று வராஹ பகவான் அருளிச் செய்தார்.

(தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் இடை விடாத பக்தி, உயிருக்கு ஆபத்து வந்த நிலையிலும் ஸத்யம் தவறாமல் வாக்கு கொடுத்தபடி ப்ரம்ம ராக்ஷஸன் முன்பே போய் தைரியமாக நின்றது, பிறகு அதே ப்ரம்ம ராக்ஷஸனுக்கு மனம் இரங்கி அபயம் கொடுத்து அவனை அந்த பிறவியில் இருந்து காப்பாற்றியது, ஊரில் அனைவரும் உறங்கும் வேளையில் கோவில் கதவுகள் சாத்தியிருந்தும் பகவான் நமது பாடலை கேட்பார் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தன் சன்னதி முன்பு வந்து பாடியது,

நம்பாடுவானின் இந்த செயல்கள் தான் அவனை தன் மனம் கவர்ந்த சிறந்த பக்தன் என்று பூதேவி நாச்சியாரிடம் சொல்ல வைத்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.)

இந்த சரித்திரத்தை கேட்ட பூதேவி நாச்சியார், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். பகவானை பக்தியுடன் பாடி அவர் மனதில் இடம் பெற்ற நம்பாடுவான் போல தாமும் பகவானை பற்றிய பாடல்கள் பாட வேண்டும் என்பதற்காக பூதேவி நாச்சியார், ஆண்டாள் நாச்சியாராக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார் என்பது பெரியோர்கள் வாக்கு.🌹

நம்பாடுவான்  திருக்குறுங்குடி நம்பி முன் அன்று இரவே தான் பாடிய கைசிக புராணம் என்ற பாடல்களை ராக்ஷஸனிடம் பகிர்ந்து கொண்டார், இதனால் ராக்ஷஸனுக்கு வைகுண்ட மோக்ஷம் கிடைக்க உதவியது. 

இப்பேற்பட்ட மஹத்துவம் வாய்ந்த கைசிக ஏகாதசி புராணம் நாடக வடிவில் ஒவ்வொரு வருடமும் திருக்குறுங்குடி கோவிலில் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி அன்று நடைபெறும்.

கைசிக புராணத்தை படிப்பவர்கள்/பாடுபவர்கள் அல்லது கேட்கும் எவரும் இப்பிறவியில் மோக்ஷம் அடைவர் என்பது நம்பிக்கை.

ஆதலால் இந்த கைசிக ஏகாதசி நாடகத்தை பார்க்க வரும் பக்தர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் , உங்களுக்கு உணவு, இருப்பிடம், போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

🙏🙏🙏 ஜெய் ஸ்ரீமன் நாராயணா !!! 🙏🙏🙏