Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 2
வராஹ பகவான் பூதேவி நாச்சியாரிடம்,
தேவி! பாரத தேசத்தின் தெற்கு திசையில் மஹேந்திரகிரி என்ற பெயரில் ஒரு மலை உள்ளது. அதன் அருகில் க்ஷீர நதி (திருப்பாற்கடல்) என்று நதிக்கரையோரத்தில் திருக்குறுங்குடி என்று ஒரு க்ஷேத்ரம் உள்ளது.
அங்கு தன் பூர்வ ஜென்ம விதிப்படி, பாணர் என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்த “நம்பாடுவான்” என்றொரு பக்தன் இருந்தான். ( Nampaduvan Photo )
அவன் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் , நம்மிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவன். இவருக்கு எத்தனை ஏற்றம் என்றால்,
எத்தனை பெருமாள் இருந்தும் நம்பெருமாள் மிக உயர்ந்தவர்!
12 ஆழ்வார்கள் இருந்தும் நம்மாழ்வார் மிக உயர்ந்தவர்!
எத்தனை ஜீயர் இருந்தும் நஞ்சீயர் மிக உயர்ந்தவர்!
எத்தனை பிள்ளை இருந்தும் நம்பிள்ளை மிக உயர்ந்தவர்!
அதை போல், எத்தனை பாடுவான் இருந்தும் நம்பாடுவான் மிக உயர்ந்தவர்!
அதனால் நம்மைப் பற்றி பாடல்கள் இயற்றி, அதை நம் சன்னதி முன்பு (கோவில் வாசல் முன்பே) ஊரே உறங்கி கொண்டிருக்கும் அதிகாலை வேளையில், தான் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதால், நம் கோவில் வாசலுக்கு சிறிது தூரத்தில் நின்று கொண்டு நம்மை குறித்து பாடல்கள் பாடிச் செல்வான். நான் இந்த உலகை காக்கும் பொருட்டு ஏதேனும் சிந்தனையிலிருந்தாலும், நம் பக்தன் நம்பாடுவான் பாடும் பாடல்களை கேட்பதற்க்காகவும் அவன் வீணை வாசிக்கும் அழகை ரசிப்பதற்க்காகவும் திருக்குறுங்குடி கோவிலின் த்வஜஸ்தம்பத்தை ( கொடிமரம்) { kodimaram photo} சற்று நகர்த்தி வைத்திருக்கிறேன். அவன் இப்படி பாடுவதற்காக என்னிடம் எதுவும் எதிர் பார்ப்பது இல்லை. எதுவும் ப்ரார்த்தனை செய்து கொள்வது இல்லை .