Kaisika Puranam – கைசிக ஏகாதசி மஹாத்மியம்

கைசிக புராணம் (வராஹ புராணத்தை ஆதாரமாக கொண்டு எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது)

  • 1. அழகிய நம்பியை ஆட்கொண்ட நம்பாடுவான்

    Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 1 அழகிய மாலை நேரம், மெல்லிய காற்று, இதமான மந்தமான வெயில் என அருமையான சூழலில், வராஹ பகவான் மற்றும் பூதேவி நாச்சியார் ஸம்பாஷணம் செய்து கொண்டிருந்தார்கள். ஸ்வாமி! தங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா! என்று பூதேவி நாச்சியார் கேட்க, பகவான் புன்னகைக்க, பூதேவி நாச்சியார் அதையே சம்மதமாக கொண்டு பேச ஆரம்பித்தாள். ஸ்வாமி! உலகத்தையே ரக்ஷிக்கிறீர்கள், கோடானு கோடி பக்தர்களை அனுதினமும் பார்க்கிறீர்கள், இதில் உங்கள் மனம்…

    Read More (மேலும் படிக்க)

  • 2. நம்பாடுவானின் பக்தி யாத்திரை

    Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 2 வராஹ பகவான் பூதேவி நாச்சியாரிடம், தேவி! பாரத தேசத்தின் தெற்கு திசையில் மஹேந்திரகிரி என்ற பெயரில் ஒரு மலை உள்ளது. அதன் அருகில் க்ஷீர நதி (திருப்பாற்கடல்) என்று நதிக்கரையோரத்தில் திருக்குறுங்குடி என்று ஒரு க்ஷேத்ரம் உள்ளது. அங்கு தன் பூர்வ ஜென்ம விதிப்படி, பாணர் என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்த “நம்பாடுவான்” என்றொரு பக்தன் இருந்தான். ( Nampaduvan Photo ) அவன் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும்…

    Read More (மேலும் படிக்க)

  • 3. ப்ரஹ்மராக்ஷஸன் வருகை

    Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 3 இப்படியாக பத்து வருடங்களாக பாடிக் கொண்டிருந்தான் நம்பாடுவான். ஒரு வருடம் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில், வழக்கம் போல ஊரார் உறங்கிய பிறகு, கையில் வீணையை எடுத்துக் கொண்டு தன் இல்லத்திலிருந்து புறப்பட்டான் நம்பாடுவான். எங்கும் காரிருள்! மிதமான நிலவொளி! இதில் வேக வேகமாக நம் சன்னதி நோக்கி வந்து கொண்டிருந்தான் நம்பாடுவான். அப்பொழுது ஒரு கரிய உருவம் தான் செல்லும் பாதையில் நிற்பது போல…

    Read More (மேலும் படிக்க)

  • 4. நம்பாடுவானிடம் தர்க்கம் செய்யும் ராக்ஷஸன்

    Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 4 தன்னை புசிக்கப்போவதாக ப்ரம்ம ராக்ஷஸன் சொல்லியும், துளியும் உயிர் பயம் இல்லாமல், என் மீது உள்ள பக்தி மற்றும் நம்பிக்கையினால் நம்பாடுவான் தைரியமாக பதில் சொன்னான். ப்ரம்ம ராக்ஷஸனே! உனக்கு நான் ஆகாரமாகிறேன். நாம் இருவரும் ப்ரம்மா எழுதி வைத்த விதிப்படி நடப்போம்.ஆனால் ஒரு வேண்டுகோள்! கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி சுபதினமாதலால் “ஜாக்ர வ்ரதம்” என்று ஒரு விரதம் அனுஷ்டித்து என் சரீரம் எல்லாம்…

    Read More (மேலும் படிக்க)

  • 5. பதினெட்டு பாவங்கள்

    Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 5 1. ஏதேனும் ஸத்யம் செய்து விட்டு, அதை செய்யாமல் அலட்சியமாக இருப்பவன், 2. காம உணர்வுகளை கட்டுப்படுத்தாமல், பர ஸ்த்ரீயுடன் (விலை மாதருடன் தொடர்பு  கொள்பவன்), 3. சாப்பிடும் போது அருகில் உள்ளவர்களுக்கு கொடுக்காமல் சாப்பிடுபவன், 4. ப்ராமணனுக்கு‌ பூமி தானம் செய்து விட்டு, மீண்டும் அவனிடமிருந்து அந்த பூமியை அபகரிப்பவன், 5. அழகான இளம் பெண்ணை சிறு வயதில் ஆசை காட்டி மோசம் செய்து விட்டு,…

    Read More (மேலும் படிக்க)

  • 6. “கைசிக பண்” இசைத்தலும் ஸத்யசோதனையும்

    Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 6 “மஞ்சனம் அழகிய நம்பி! – தனைவழுத்துவோர் வாழ்வித்த நம்பி! – வண்மைஅழகிய நம்பி! வடிவழகிய நம்பியே!நஞ்செனக் கிடந்தோன் பழிதீர்த்தருள்நாளும் புதியதோர் நம்பி! -நலமிகுசெங்கனி வாயுடை நம்பி!நாத விநோதனனே சரணம்.” “மகாமஞ்சோலையிலும் வானளந்த மணிக்கோபுரமும்கோவில் எங்கும் பாடும் குருகேசா – வாக்குவளைச்சக்கரமும் சங்கும் தனுவாள் கதையுடனேபக்கம் நின்று காத்தருள்வாய்.” என்று பல பாமாலைகளை நம் சன்னதி முன்பு வந்து பாடி மனமுருகி ப்ராத்திக்கொண்டு, பகவானே! எனக்கு சுமையாக இருக்கும்…

    Read More (மேலும் படிக்க)

  • 7. நம்பாடுவானிடம் சரணாகதி அடைந்த பிரம்மராக்ஷஸன்

    Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 7 ப்ரம்ம ராக்ஷஸன் இருக்குமிடத்தை அடைந்த நம்பாடுவான், ஏ ராக்ஷஸனே! இதோ சொன்ன படி நான் வந்து விட்டேன். நான் வழக்கம் போல் கோவிலுக்கு சென்று பக்தியுடன் பாடி, அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமன் நாராயணான ஸ்ரீஅழகிய நம்பி பகவான் திருப்தியடையும்படி பாடி விட்டு வந்து என் ஸத்தியத்தை காப்பாற்றியுள்ளேன். நீயும் உன் இஷ்டம் போல் என்னை புசித்து உன் பசியாற்றிக்கொள்வாயாக. “ஏ மானிடா! நீ உயிரோடு உனது க்ருஹம்…

    Read More (மேலும் படிக்க)

  • 8. நம்பாடுவானுக்கும் ப்ரம்ம ராக்ஷஸனுக்கும் மோக்ஷம் கடாக்ஷித்த ஸ்ரீ அழகிய நம்பி

    Thirukkurungudi Kaisika Ekadasi Mahatmiyam – Part 8 ஏ ப்ரம்ம ராக்ஷஸனே, இன்று அதிகாலை இந்த திருக்குறுங்குடி பகவான் முன்பு🌹🌹கைசிகம்🌹🌹 என்று ஒரு பாடல் தொகுப்பு பாடி வந்தேன். அதனுடைய முழு பலனையும் உனக்கு அர்ப்பணிக்கிறேன். நீ இந்த ஜென்மாவிலிருந்து விடுபட்டு, ‌பகவான் ஸ்ரீமன் நாராயணனின் சாம்ராஜ்யமான பரமபதத்திற்கு செல்வாயாக! என்று நம்பாடுவான் பாட்டின் பலனை அர்ப்பணித்த, அடுத்த நொடியே ப்ரம்ம ராக்ஷஸனின் சாபங்கள் மறைந்து போயின. (பகவானின் உலகமான பரமபதம் தான் மோக்ஷம் அடைந்த…

    Read More (மேலும் படிக்க)