12. பரம் வியூகம் விபவம்

Thirukkurungudi Stalapuranam – Part 12

பள்ளிகொண்ட நம்பி

பைரவர் ஸந்நிதியை ஸேவித்து முடித்துவிட்டு பள்ளிகொண்ட நம்பியை ஸேவிப்பதற்கு படிகளில் ஏறும் போது விஷ்வக்ஸேனர் (विष्वक्सेन) வீற்றிருப்பார். விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைஷ்ணவத்தின் வைகானஸப் பிரிவில் விஷ்வக்சேனர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். எந்தவொரு சடங்கும் அல்லது செயல்பாடும் விஷ்வக்ஸேனரின் வழிபாட்டுடன் தொடங்குகிறது. விஷ்ணுவின் படையின் தளபதியாக, அவர் சடங்கு அல்லது செயல்பாட்டை தடைகள் மற்றும் தீமையிலிருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.

பாற்கடலுள் பையத்துயிலும் பள்ளிகொண்ட நம்பி ஸ்ரீதேவி பூதேவி ஸமேத மார்க்கண்டேய பிருகு மஹரிஷிகளுடன் ஸயன திருக்கோலத்தில் மூலவர் உற்ஸவருடன் காட்சி தருகிறார். இவர் ஐந்து நம்பிகளில் மூன்றாவதாக திகழ்கிறார்.

வீற்றிருந்த நம்பி

இரண்டாவது நிலையான வீற்றிருந்த நம்பி சந்நிதியில் பெருமாள் பரமபதத்தில் காட்சி தருவது போலவே பாம்பணையில் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத பிருகு மார்க்கண்டேய மஹரிஷி ஸஹிதமாக ஏழுலகும் தனிக்கோல் செல்ல அமர்ந்த திருக்கோலத்தில் மூலவர் உற்சவருடன் காட்சி தருகிறார்.இந்த பூவுலகை விட பிரமாண்டமான உலகம். பரமபதம் என்ற இடம்.

திருப்பாற்கடல் நம்பி

இத்திவ்யதேசத்தில் நான்காவது நம்பியான திருப்பாற்கடல் நம்பி ஸந்நிதி க்ஷீரம் என்று அழைக்கப்படும் நதிக்கரையில் அமைந்திருப்பதால் திருப்பாற்கடல் நம்பி என்று அழைக்கப்படுகிறார். இவர் மஹேந்திரனுக்காகத் தன்னை தாழவிட்டு மஹேந்திரபர்வதபர்யந்தமான திருக்குறுங்குடியிலே குரியமானுருவாகி எழுந்தருளியிருக்கிறார். இவருடைய ஸந்நிதி பிரதான கோவிலில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது.